என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வாழ்க்கை தரம்"
- சிவகங்கை மாவட்ட இளைய தலைமுறையினர் அரசு திட்டங்களின் மூலம் தொழில்கள் தொடங்கி வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.
- வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை 25 சதவீத மானியத்துடன் கூடிய கடனுதவியும் அளிக்கப்படுகிறது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் மதுசூதன் ரெட்டி காரைக்குடி வட்டம், அரியக்குடியில் செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்களில் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பிளஸ்-2, பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு மற்றும் தொழிற்கல்வி தேர்ச்சி பெற்ற வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை 25 சதவீத மானியத்துடன் கூடிய கடனுதவியும் அளிக்கப்படுகிறது.
வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வியாபாரம், சேவை தொழில்கள் மற்றும் உற்பத்தி தொழில்கள் தொடங்க முறையே ரூ.5 லட்சம் மற்றும் ரூ.15 லட்சம் வரை 25 சதவீத மானியத்துடன் கூடிய கடனுதவியும் வழங்கி முதல்-அமைச்சர் தலைமையிலான தமிழக அரசு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழில் முனைவோர்களாக மாற்றி ஒரு வரலாற்று சாதனையை நிகழ்த்தி வருகிறது.
கலைப்பாடுகளுடன் கூடிய கைவினைப் பொருட்களை தயாரிப்பதற்கான கலையினை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்து செல்லும் வகையில், ஆர்வமுள்ளவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதற்கு திட்டமிடப்பட்டது. அதன்படி, காரைக்குடி வட்டம், அரியக்குடியில் 25-க்கும் மேற்பட்டவர்கள் தனித்தனியாக வெண்கல குத்துவிளக்கு, கடவுள் உருவங்கள், மணிகள், திருவாட்சி மற்றும் பிற பூஜை பொருட்களை உற்பத்தி செய்யும் பணியினை மேற்கொண்டு வரும் உற்பத்தியாளர்கள், அவர்கள் மேற்கொண்டு வரும் தொழிலை மேம்படுத்தும் வகையில், அரசால் வழங்கப்பட்டு வரும் மானியத்துடன் கூடிய கடனுதவிகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் வெண்கல உலோக உற்பத்தியா ளர்களுக்கான குழுமம் ஒன்றை அமைத்து தருவதற்கு கோரிக்கை வைத்துள்ளதன் அடிப்படையில் அதற்கான இடத்தையும் தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு, இளைய தலை முறையினர்கள் இதுபோன்று அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் மூலம் பல்வேறு தொழில் நிறுவனங்கள் தொடங்கி, பயன்பெற்று தங்களது வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கண்ணன், சிவகங்கை, புள்ளி விவர ஆய்வாளர் நாகராஜன், சிவகங்கை தொழில் கூட்டுறவு அலுவலர் ருத்ரமூர்த்தி, தொழில் கூட்டுறவு மேற்பார்வையாளர் முத்துக்குமார், காரைக்குடி வட்டாட்சியர் தங்கமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- இந்திய சுதந்திர போராட்ட வரலாறு மற்றும் மத்திய அரசின் 8 ஆண்டுகால சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சி கன்னியாகுமரி பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு அருகே உள்ள பழைய பேரூராட்சி அலுவலக மைதானத்தில் வருகிற 13-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. இந்தப் புகைப்படக் கண்காட்சியின் தொடக்க விழா நேற்று மாலை நடந்தது.
- நிகழ்ச்சியில் குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.தளவாய்சுந்தரம், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.எம்.ஆர்.காந்தி, திருவனந்தபுரம் கோட்ட ரெயில்வே பொதுமேலாளர் பி.ஜி.மல்லையா, கீல்தொண்டு நிறுவன இயக்குனர் சிலுவைவஸ்தியான்உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி,
இந்தியாவின்75-வது சுதந்திர திருவிழாவையொட்டி இந்திய சுதந்திர போராட்ட வரலாறு மற்றும் மத்திய அரசின் 8 ஆண்டுகால சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சி கன்னியாகுமரி பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு அருகே உள்ள பழைய பேரூராட்சி அலுவலக மைதானத்தில் வருகிற 13-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. இந்தப் புகைப்படக் கண்காட்சியின் தொடக்க விழா நேற்று மாலை நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகத்தின் தென்மண்டல இயக்குநர் ஜெனரல் எஸ்.வெங்கடேஸ்வர் தலைமை தாங்கினார். சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலக கூடுதல் இயக்குனர் ஜெனரல் எம். அண்ணாதுரை வரவேற்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய ரெயில்வே, நிலக்கரி, மற்றும் சுரங்க அமைச்சகத்தின் இணை மந்திரி ராவ்சாகேப் பாட்டீல் தன்வே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்திய சுதந்திர போராட்ட வரலாறு குறித்த புகைப்பட கண்காட்சி அரங்கத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். அதன் பிறகு மத்திய மந்திரி ராவ்சாகேப் பாட்டீல் தன்வே குத்துவிளக்குஏற்றி 5 நாள் புகைப்படகண்காட்சியை தொடங்கி வைத்துபேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
இன்னும் 25 ஆண்டு களுக்குப் பின்னர் நம்நாடு எப்படி இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி நிதிநிலை அறிக்கையை தயாரித்துள்ளார். 2014-ம்ஆண்டில் நாட்டின் பிரதமராக மோடி பதவியேற்றபோது ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்தார். இந்த 8 ஆண்டு கால ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பிரதமர் மோடி அடுத்த 25 ஆண்டுகளை கணக்கில் கொண்டு தயாரித்திருக்கிறார்.
25 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா எப்படி இருக்கவேண்டும் என்று அடிப்படையில் மோடியின் தொலை நோக்கு பார்வையில் அந்த திட்டங்களை தொடர்ந்துசெயல்படுத்தி வருகிறார். 130 கோடி மக்களில் 80 கோடி மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி மேம்படுத்த வீடு இல்லாத ஏழைகளுக்கு வீடுகள், கழிப்பறைகள், மின்சார வசதி, எரிவாயு இணைப்புகள் என்று மக்களின் அடிப்படைத் தேவைகளை அறிந்து சிறந்த முறையில் பிரதமர்மோடி செயலாற்றி வருகிறார். கொரோனா காலகட்டத்தி ல் மக்களுக்கு தடுப்பூசி, மாத்திரை, மருந்துகளை உலகத்திலேயே இலவசமாக வழங்கிய ஒரே பிரதமர் மோடி மட்டும்தான். இந்தியா முழுதும் 130 கோடி மக்களுக்கு இலவச தடுப்பூசி போடவைத்தபெருமை பிரதமர் மோடியை சேரும்.
ஜன்தன் திட்டத்தின் மூலம் 45 கோடி மக்கள் வங்கிக்கணக்கு தொடங்கும் திட்டத்தை செயல்படுத்திஉள்ளார். கடந்த 8 ஆண்டுகளில் உலகத் தலைவர்களை திரும்பிப் பார்க்க வைத்த பிரதமராக மோடி திகழ்கிறார். 8 ஆண்டுகளில் பிரதமர்மோடி செய்த சாதனைகளை ஒரு நாளில் சொல்ல முடியாது.
இவ்வாறு மத்திய மந்திரி ராவ்சாகேப் பாட்டீல் தன்வே பேசினார்.
இந்தநிகழ்ச்சியில் குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.தளவாய்சுந்தரம், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.எம்.ஆர்.காந்தி, திருவனந்தபுரம் கோட்ட ரெயில்வே பொதுமேலாளர் பி.ஜி.மல்லையா, கீல்தொண்டு நிறுவன இயக்குனர் சிலுவைவஸ்தியான்உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் வங்கிகள் மூலம் ஏழைகளுக்கு கடன் உதவியாக ரூ.15 கோடியே 60 லட்சத்துக்கான காசோலையை மத்திய மந்திரி ராவ்சாகேப் பாட்டீல் தன்வே வழங்கினார். மகளிர் சுய உதவி குழுவைச்சேர்ந்த பெண்களுக்கும் நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். முடிவில் சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலக இயக்குனர் காமராஜ் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை கள விளம்பர துணை இயக்குனர் சிவகுமார் தொகுத்து வழங்கினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்